shadow

மாணவர்களுக்கு மாம்பழச்சாறு திட்டம் கைவிடப்பட்டது ஏன்? சட்டசபையில் முதல்வர் விளக்கம்
jayalalitha
15வது சட்டசபையின் முதல் கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல்வர் ஜெயலலிதா விவாதத்திற்கு பதிலளித்து வருகிறார். இன்றுடன் சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ஜெயலலிதா பதிலளிப்பதற்கு முன்னர் கேள்வி நேரத்தில் திமுக உறுப்பினர் செங்குட்டுவன் ‘பள்ளி மாணவர்களுக்கு மாம்பழச்சாறு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் அறிவித்த திட்டம் என்ன ஆயிற்று என்று கேள்வி எழுப்பினார்.

திமுக எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, ‘மருத்துவர்களின் ஆலோசனைப்படி மாணவர்களுக்கு மாம்பழச் சாறு வழங்கும் திட்டத்தை தவிர்த்துவிட்டதாகவும், சில மாணவர்களுக்கு மாம்பழச் சாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்ததால் அந்த திட்டத்தை அரசு கைவிட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் பால் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளும் என தெரிகிறது.

Mango juice in the noon meal scheme was avoid in Tamil Nadu Government says Jayalalitha.

Leave a Reply