shadow

ரூபாய் நோட்டு பிரச்சனையால் பசியில் வாடும் பயணிகளுக்கு உதவும் பல்வீந்தர்சிங்

பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்து ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் நிலைமை இயல்புக்கு திரும்பவில்லை

வங்கி கொடுத்த ரூ.2000ஐ வைத்துக்கொண்டு காசிருந்தும் தேவையான பொருட்களை வாங்க முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். இந்நிலையில் பெருமளவு பாதிக்கப்படுவது பயணம் செய்பவர்கள்தான். ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் சாப்பிட கூட சில்லறை பணம் இல்லாமல் அவதியுறுகின்றனர்.

இந்நிலையில் மங்களூரை சேர்ந்த பல்வீந்தர்சிங் என்பவர் மங்களூர் பேருந்து நிலையத்திலும், ரயில் நிலையத்திலும் சுடச்சுட சாப்பாட்டை இலவசமாக பயணிகளுக்கு வழங்கி வருகிறார். ரூபாய் நோட்டுக்கள் சீரடையும் வரை தனது பணி தொடரும் என்று அவர் கூரியுள்ளார்.

தனது கிரெடிட் கார்டு மூலம் உணவுக்கு தேவையான பொருட்களை வாங்கி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் இந்த சாப்பட்டை தயாரிப்பதாகவும், பசியோடு வரும் பயணிகளின் பசியை போக்குவதே தனது குறிக்கோள் என்றும் பல்வீந்தர்சிங் கூறியுள்ளார்.

1 2 3 4

Leave a Reply