shadow

மான்செஸ்டர் வெடிகுண்டு விபத்தில் இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் ஐபோன்

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் கடந்த திங்கள் அன்று அதிகாலை நடந்த தீவிரவாதியின் தற்கொலை வெடிகுண்டு சம்பவத்தில் 22 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவத்தில் ஒரு இளம்பெண்ணின் உயிரை ஆப்பிள் ஐபோன் காப்பாற்றியுள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த வெடிகுண்டு சம்பவத்தின்போது லிசா பிரிட்கெட் என்ற பெண், தனது ஆப்பிள் ஐபோனில் தனது உறவினருடன் பேசிக்கொண்டிருந்ததார். அப்போது, இரும்புத்துண்டு ஒன்று சிதறி இவர் மீது விழுந்துள்ளது. ஆனால் ஐபோனில்பேசிக்கொண்டிருந்ததால் இவரை அந்த இரும்புத் துண்டு நேரடியாகத் தாக்கவில்லை. இரும்புத்துண்டு தாக்கியதில், லிசாவின் செல்போன் சுக்குநூறாக உடைந்துவிட்டாலும் அவரது உயிருக்கு ஆபத்து இல்லாமல் கை, கன்னம், மூக்கு ஆகிய பகுதிகளில் மட்டும் சில காயங்கள் ஏற்பட்டது,

ஒருவேளை அந்த இரும்புத்துண்டு லிசாவை நேரடியாகத் தாக்கியிருந்தால், அவர் உயிர் பிழைத்திருக்க முடியாது’ என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது உயிரை காப்பாற்றிய ஐபோனுக்கு அவர் மானசீகமாக நன்றி தெரிவித்து கொண்டாராம்.

Leave a Reply