shadow

புதிய ஐபிஎல் அணியை வாங்குவதற்கான டெண்டர் வழங்கும் கடைசி தேதி அக்டோபர் 5 என்று இருந்த நிலையில் தற்போது திடீரென அந்த தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது

வரும் ஆண்டு ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் இணைய உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐபிஎல் அணியை வாங்க பிரபல கால்பந்து கிளப்களில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகம் விருப்பம் தெரிவித்துள்ளது

மேன்சிஸ்டர் யூனிட்டட் நிர்வாகம் விருப்பம் தெரிவித்ததால் ஐபிஎல் டெண்டர் தேதி அக்டோபர் 5ல் இருந்து அக்டோபர் 10 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.