வால்பாறையை அடுத்துள்ள மானாம்பள்ளியில் விநாடிக்கு 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 2 மின் நிலையங்கள் உள்ளன. சோலையார் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் இந்த நிலையங்கள் இயக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த 2 மின் உற்பத்தி ஜெனரேட்டர்களில் ஒன்று 2012ம் ஆண்டு பழுதடைந்தது. அதனால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்கழக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, கடந்த சில வருடத்திற்கு முன்  தனியார் நிறுவனம் பழுது நீக்க உத்தரவு பெற்றது. ஆனால் இதுவரை பணிகளை முடிக்கவில்லை, விரைவில் பழுது நீக்கி ஜெனரேட்டர்  இயக்கப்படும் என்றனர்.  மின் உற்பத்தியின் அவசியம் தற்போது தமிழ்நாட்டில் முக்கியம் என்பதால், மின் நிலைய பழுதை விரைவில் நீக்கி வடகிழக்கு பருவமழையின்போது கிடைக்கும் நீர் ஆதாரத்தை பயன்படுத்தி விநாடிக்கு 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டுமென மின்வாரிய அதிகாரிகளை பொதுநல ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Reply