mla attacked சிவகெங்கை மாவட்டம் மானாதுரை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குணகேரனை இன்று காலை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டனர். அவர்களை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

mla attackedதற்போதைய மானாமதுரை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் குணசேகரன். இவர் இன்று காலை அவர் வீட்டின் அருகே உள்ள கடை ஒன்றில் நின்று கொண்டிந்தபோது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால், குணசேகரன் எம்.எல்.ஏ.வை சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயற்சித்தனர். இதில் குணசேகரனின் தலை, கழுத்து மற்றும் கை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் ஆறுபோல் ஓடியது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1hnDWv5″ standard=”http://www.youtube.com/v/xiRVmfmzIpQ?fs=1″ vars=”ytid=xiRVmfmzIpQ&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep8816″ /]

இந்த சம்பவத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து பின்னர் குணசேகரன் எம்.எல்.ஏவை சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை  மதுரை கொண்டு செல்ல மருத்துவர்கள் கூறிய ஆலோசனையின்படி ஆம்புலன்ஸில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கார்த்திக், சசிகுமார், மற்றொரு கார்த்திக் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு பேரை தேடி வருகி்ன்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *