white houseஅமெரிக்க அதிபர் ஒபாமா தனது குடும்பத்தினர்களுடன் தங்கியுள வெள்ளை மாளிகைக்கு வெளியே காரில் சுற்றி திரிந்த மர்ம மனிதனை போலீசார் இன்று கைது செய்தனர். அவனிடம் செய்யப்பட்டசோதனையில் துப்பாக்கியும் மற்ற சில வெடிபொருட்களும் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே உள்ள சோதனை சாவடியில் போலீசார் சோதனையிடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது  கார் ஒன்றில் வந்த அயோவா என்ற நாட்டை சேர்ந்த ஒரு மர்ம மனிதன் காரை சோதனைச்சாவடி அருகே நிறுத்திவிட்டு திடீரென வெள்ளை மாளிக்குள் நுழைய முயன்றான். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவனது கையில் துப்பாக்கி இருந்தது. அவனது காரை சோதனை செய்த போது  காரில் 40 சுற்று வெடிபொருடகள் கண்டு பிடிக்கபட்டது.

அவரிடம் விசாரனணை நடத்தியதில் அவரது பெயர் ஆர்.ஜே ரெனாய் கபீம் ( வயது 41) என்றும் 850 மைல் தொலைவில் உள்ள அயோவா நாட்டின் தலைநகர் டன்போர்ட்டை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. அவன் எதற்காக வெடிபொருட்களுடன் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்றான் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *