shadow

9

மரத்தை வெட்ட முயன்ற ஒரு மனிதனை  அந்த மரமே பழிவாங்கிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று மிச்சிகன் என்ற நாட்டில் நடந்துள்ளது. மரம் வெட்டுபவரை கடுமையான காயத்தை உண்டுபண்ணிய வீடியோவை பலர் இணையதளங்களில் அதிர்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.

மிச்சிகன் நாட்டில் ஃபிளிண்ட் என்ற நகரத்தில் உள்ள காடு ஒன்றில் மரம் வெட்டும் குழு ஒன்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்றது. ஏணி ஒன்றின் உதவியால் மரத்தில் ஏறிய மரம் வெட்டும் தொழிலை செய்யும் ஒருவர் மின்சார ரம்பம் மூலம் மரத்தின் ஒரு பெரிய கிளையை உடைத்தார். அந்த கிளை சடாரென்று முறிந்து அவரை தூக்கி வீசியது. படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக எடுத்து செல்லப்பட்டார்.

இந்த அதிர்ச்சி வீடியோவை மரம் வெட்டும் குழுவின் தலைவர்  யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்தார். ஒருசில நாட்களில் இந்த வீடியோவை பார்த்தவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை நெருங்கிவிட்டது.

 

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1kADB4K” standard=”//www.youtube.com/v/Bzd8WtVJVfc?fs=1″ vars=”ytid=Bzd8WtVJVfc&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep2200″ /]

Leave a Reply