பிரான்ஸ் போன்று சீனாவில் நடந்த த்ரில்லிங் சம்பவம்

சீனாவில் உள்ள சியாங் என்ற மாகாணத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று வீட்டில் உள்ள மாடியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத வகையில் அந்த குழந்தை தவறி விழுந்து விட்டது. குழந்தையின் தலை கம்பிகளுக்கிடையில் சிக்கிக் கொண்டதால் அபாயகரமான நிலையில் குழந்தை தொங்கிக் கொண்டிருந்தது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் படிக்கட்டுகள் வழியே சென்றால் கால தாமதமாகி விடலாம் என்று எண்ணி கட்டிடத்தின் வெளிப்புற ஜன்னல்கள் வழியே படபடவென ஏறி சென்று குழந்தையை மீட்டார்.

முன்னாள் ராணுவ வீரரான அவர் மிகவும் தாழ்மையுடன், நான் ஒரு ராணுவ வீரன், இந்த நிலைமையில் எந்த ராணுவ வீரரானாலும் நான் செய்ததைத்தான் செய்திருப்பார் என்று கூறினார்.

ஷாங்கையும் சீன இணையதளம் ஒரு ஹீரோ என பாராட்டி, நீங்கள் எங்கள் சீன ஸ்பைடர்மேன் உங்களுக்கும் பரிசு கொடுக்க வேண்டும் என புகழாரம் சூட்டியுள்ளது. இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்டில் பிரான்ஸ் நாட்டில் கசாமா என்ற வாலிபர் நான்காவது மாடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை மீட்டதற்காக பிரான்ஸ் குடியுரிமை பெற்றார் என்பது தெரிந்ததே.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *