shadow

தாயின் உயிரை காப்பாற்ற பெண்ணாக மாறிய ஆண்

உலகின் விலை மதிப்பில்லாதது தாய்ப்பாசம் என்றால் அதற்கு சிறிதும் குறையாதது தாயிடம் பிள்ளைகள் வைத்துள்ள பாசம் என்றால் அது மிகையாகாது. தாயின் உயிரை காப்பாற்ற ஒரு ஆண், இருபது வருடங்களாக பெண்ணாக வாழ்ந்து வருகிறார்

சீனாவில் குவாங்சி மாகாணத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரின் தங்கை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். மகள் இறந்த துக்கத்தைத் தாங்காத, அவரின் தாயார் மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டார். மனநலம் பாதித்த தாயின் செயல்களும் மாற ஆரம்பித்துள்ளன. தன் தாயின் மனநலத்தை கண்டு மனமுடைந்த அந்த நபர் தனது தங்கை போலவே தனது தோற்றத்தை மாற்றி தாயாரின் உயிரை காப்பாற்ற பெண்ணாகவே வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து அந்த வாலிபர் கூறுகையில், நான் இப்படி செய்வதன் மூலம் தன்னுடைய தாய் மகிழ்ச்சி அடைகிறார். இதன் காரணமாகவே தொடர்ந்து இதை செய்து வருகிறேன். தன்னுடைய இந்த தோற்றத்தைப் பார்த்து சிரிக்கும் மக்களைக் கண்டு நான் பயப்படவில்லை. நான் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இதுகுறித்து அவரின் தாயார் கூறுகையில், “என்னுடைய ஒரு மகள் இறந்துவிட்டாள். அப்போதிலிருந்து இவன் என்னுடைய மகளாக மாறிவிட்டான். இதனால் நானும் என் மகனை மகளாகவே ஏற்றுக் கொண்டேன். இவன்தான் என் மகள்” என்று கூறியுள்ளார்.

தாய்க்காக பெண்ணாக மாறிய இவர் சமூக வலைத்தளத்தில் பிரபலமாக பேசபட்டு வருகிறார். பலரும் இவரின் தியாகத்தை புகழ்ந்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் #HePosedAsHisDeadSisterFor20Years என்ற ஹஸ்டேக்குடன் இவரின் இந்த செயலை பலர் பாராட்டி வருகின்றனர்

Leave a Reply