shadow

ஏழைகளுக்கு உதவி செய்து போராட்டம். இது மகாராஷ்டிரா விவசாயிகள் ஸ்டைல்

தமிழக விவசாயிகள் சமீபத்தில் பல்வேறுவிதமான நூதன போராட்டங்களை நடத்தினர் என்பது அனைவரும் அறிந்ததே., இந்நிலையில் தற்போது தெலுங்கானா மாகாணத்தில் விவசாயிகள் ஒரு நூதன போராட்டத்தை மேற்கொண்டனர்.

மகாராஷ்டிர மாநில விவசாயிகள் கடந்த சில நாட்களாக பயிர் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கை நிறைவேற்றல், வட்டி இல்லா கடன், ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி போராட்டம் செய்து வந்தனர். இந்த நிலையில் இந்த போராட்டத்தில் இன்று பால் உற்பத்தி செய்பவர்களும் விவசாயிகளுடன் போராட்டத்தில் இணைந்தனர்.

முதலில் உற்பத்தி செய்த பாலை சாலையில் கொட்டும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்த பாலை கீழே கொட்டுவது முறையாகாது என்று முடிவு செய்த அவர்கள் தங்களிடம் இருந்த பாலை ஏழை சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி, போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன் காரணமாக இலவச பாலை பெற்ற அனைத்து பொதுமக்களும் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். இதனால் விரைவில் இந்த போராட்டத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் மகாராஷ்டிர மாநில அரசு உள்ளது என்பது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply