shadow

பெண் வேடமிட்டு 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 36 வயது நபர் கைது

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் 36 வயது நபர் ஒருவர் பெண்ணின் உடையணிந்து 14 வயது சிறுவனை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து அந்த சிறுவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இதுகுறித்த விசாரணையில் அந்த நபரின் பெயர் குவாண்டின் பிலிப்ஸ் என்பதும், அவர் இதுபோன்ற பெண் வேடமிட்டு பல சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

பின்னர் பிலிப்ஸை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தலைமறைவாகியுள்ள அவருடைய நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply