shadow

சோனியா காந்தி – மம்தா பானர்ஜி இன்று சந்திப்பு: மெகா கூட்டணிக்கு அச்சாரமா?

வரும் 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜகவை வீழ்த்த அக்கட்சிக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக இருக்கும் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சோனியா காந்தியை சந்தித்து பேசவுள்ளார்.

ஏற்கனவே பாஜகவுக்கு எதிரான கட்சிகள் தலைவர்கள் மற்றும் பாஜக அதிருப்தி தலைவர்களை சந்தித்து பேசியுள்ள மம்தா, இன்று காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தியையும் சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பின் போது பாஜக கூட்டணிக்கு எதிரான தேசிய அணியை உருவாக்குவது எப்படி என்பது குறித்து சோனியாவும், மம்தாவும் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்றும் மம்தா பானர்ஜியின் இந்த நடவடிக்கைகள் தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்,

ஆனால் அதே நேரத்தில் சிவசேனா, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, பிஜு ஜனதா தளம், ஆம்ஆத்மி போன்ற கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கும் எதிரான கட்சிகள் என்பதால் மம்தாவின் இந்த முயற்சி எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply