mallikaஇதுவரை கவர்ச்சி வேடங்களில் நடித்து இளைஞர்களின் உணர்ச்சிகளை தூண்டிய நடிகை மல்லிகா ஷெராவத், முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கை வரலாற்று சினிமா ஒன்று இந்தியில் தயாராகிறது. இந்திராவின் இளமை கால வாழ்க்கை, குடும்பம், அரசியல் ஆகியவை இந்த படத்தில் இடம் பெறுகிறது. மேலும் அவரது பாதுகாவலர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியும் இந்த படத்தில் இடம்பெறுகிறது.

இந்த படத்தின் திரைக்கதை தயாராகிவிட்ட நிலையில் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்க பொருத்தமான நடிகையை கடந்த சில மாதங்களாக இயக்குனர் தேடி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ என்ற படத்தில் மல்லிகா ஷெராவத்தின் அபாரமான நடிப்பை பார்த்த இயக்குனர் அவரையே இந்திரா காந்தி வேடத்தில் நடிக்க வைக்க முடிவு செய்து ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் இந்திரா காந்தியின் கம்பீர சாயல் மல்லிகா ஷெராவத்துக்கு இருப்பதாகவும் படக்குழுவினர் கூறுகின்றனர். மல்லிகா ஷெராவத்தும் இந்த சவாலான கேரக்டரில் நடிக்க விருப்பம் தெரிவித்து உள்ளார். தன்னை அந்த வேடத்துக்கு தயார்படுத்தியும் வருகிறார். தற்போது நேரு குடும்பத்தினரின் ஒப்புதலுக்காக இந்த படத்தின் திரைக்கதை அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களுடைய ஆட்சேபணை இல்லாத பட்சத்தில் இந்த படத்தில் மல்லிகா ஷெராவத் இந்த படத்தில் நடிப்பார் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *