shadow

கேரள வெள்ள நிவாரண நிதியாக மாலத்தீவில் இருந்து வந்த ரூ.35 லட்சம்

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கேரள மாநிலத்தில் சில நாட்களாக பெய்து வந்த கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் ஏராளமானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பால் மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.500 கோடி மட்டுமே கொடுத்துள்ளது.

இருப்பினும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு நிவாரணமாக இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் இருந்து நிதிகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் கேரளாவுக்கு ரூ.35 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என மாலத்தீவு அதிபர் மாளிகை அறிவித்துள்ளது..

இதுகுறித்து இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர் அகமது முகமது கூறுகையில், இந்தியா எங்கள் நெருங்கிய அண்டை நாடாகும். இந்தியாவில் இயற்கை பேரழிவு ஏற்பட்டால் அது மாலத்தீவில் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும். தேவையான நேரங்களில் தோழமையோடு எங்களுடன் நின்ற இந்தியாவிற்கு மாலத்தீவின் சிறிய நன்கொடை இது என அவர் தெரிவித்தார்.

Leave a Reply