shadow

hijacked

மாயமான மலேசிய விமானம் MH370 குறித்து ஒரு மாதமாக பலவித கருத்துக்கள் ஊடகங்கள் இடையே பரவி வருகிறது. இந்த கருத்துக்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வருவதால் எதை ஏற்றுக்கொள்வது எதை புறக்கணிப்பது என்று புரியாமல் உலக நாடுகளின் மீட்புப்படைகள் குழம்பி வருகின்றன. இந்நிலையில் இன்று பிரிட்டனின் முன்னாள் அறிவியல்துறை அதிகாரி ஒருவர் திடுக்கிடும் தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

பிரிட்டன் நாட்டின் முன்னாள் அறிவியல் துறை ஆலோசகரும், உள்துறை அதிகாரியுமான  Dr. Sally Leivesley அவர்கள் லண்டனின் சண்டே எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் “மலேசிய விமானம் கண்டிப்பாக ஒரு கடத்தல் சம்பவம்தான். ஆனால் இதில் விமானிகளுக்கு தொடர்பு இருக்கும் என்று தான் கருதவில்லை என்றும், விமானம் மேலே பறந்து கொண்டிருக்கும்போது கீழே இருந்து மிகவும் சக்தி வாய்ந்த ரிமோட் கண்ட்ரோல் மூலம் விமானத்தின் வேகம், திசை, போன்றவற்றை சக்தி வாய்ந்த ரேடியோ சிக்னல்கள் மூலம் கட்டுப்படுத்தி தங்கள் வசம் விமானத்தை கட்டுப்படுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார். (“hackers could change the plane’s speed, altitude and direction by sending radio signals to its flight management system. It could then be landed or made to crash by remote control.” )

மேலும் இதுதான் உலகிலேயே முதன்முதலாக நடந்த சைபர் ஹைஜாக் என்று கூறியுள்ள அவர் மலேசிய விமானிகளுக்கு இந்த ரிமோட் கண்ட்ரோல் டெக்னிக்கல் குறித்து அறிந்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் இந்த டெக்னாலஜி வல்லரசு நாடுகளில் உள்ள ராணுவத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகிற டெக்னாலஜி என்றும் கூறியுள்ளார்.

இவர் அமெரிக்க ராணுவத்தைத்தான் மறைமுக கூறுகிறார் என்று கருத்து கூறியிருக்கிறது சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகை. ஆனால் இந்த செய்திகள் எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாமல் அமெரிக்க அரசும், ராணுவமும் இன்னும் மெளனம் காத்து வருவதுதான் சந்தேகத்தை அதிகப்படுத்துவதாக உள்ளது.

Leave a Reply