Sruthi_6870 (1)

மலையாள பெண்கள் மீது ஏன் காதல் வயப்பட வேண்டும் என்பதற்கான காரணங்கள்!!

கொஞ்சி தமிழ் பேசுதல்:

கொஞ்சி, கொஞ்சி தமிழ் பேசினாலும், ல, ள, ழ சரியாக உச்சரிக்க கூடியவர்கள் மலையாள மக்கள். இந்த தெளிவான உச்சரிப்பு தமிழை ரசித்து கேட்க உதவும். சாதாரணமாக காதலி கொஞ்சிப் பேசினாலே ஆண்கள் உருகிவிடுவார்கள். அதிலும், பேசும் மொழியையே கொஞ்சி, கொஞ்சி பேசினால்?? கேட்கவா வேண்டும்.

கண்மை

காதலில் பெண்கள் இதழ் திறந்து பேசுவதை விட, விழி இமைத்து பேசுவது தான் அதிகம். கவ்வும் இதழ்களை விட, மனதை கவ்வும் விழிகளுக்கு தான் காதலில் அதிகமான ஈர்ப்பு இருக்கிறது. கண்மை, அந்த விழிகளுக்கு மேலும் அழகை சேர்க்கும். அந்த கண்மையை சீரும், சிறப்புமாக இட்டு, அழகை மெருகூட்டி, ஆண்களின் மனதை கவிழ்ப்பதில் மல்லூ பெண்கள் வல்லவர்கள்.

டிரெஸ்ஸிங் சென்ஸ்

பாவாடை தாவணி, சுடிதார், புடவை என ஜீன்ஸ் வரையிலும் செம்மையாக உடை அணிய தெரிந்தவர்கள் மலையாள பெண்கள். இது அவர்களின் மீது ஈர்ப்பு அடைய பருவ வயது ஆண்களை தூண்டும். அந்த தூண்டுதல் காதலாக மருவிவிட்டால் அதற்கு பெயர் தான் நாம் மேற்கூறிய வரம்.

இயல்பாக பழகுதல்

அழகை புறத்திலும் மட்டுமின்றி அகத்திலும் அதிகம் வைத்திருப்பவர்கள் மலையாள மக்கள். உபசரிப்பும், விருந்தோம்பலும் அவர்களது அன்பின் அடையாளமாக திகழ்கிறது.

இயற்கை அழகு

காதலியுடன் அழகான இடத்திற்கு சென்று வர வேண்டும் என அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால், அழகான காதலியுடன், நீங்கள் வாழும் இடமும் அழகாக இருப்பது, “கண்ணா ரெண்டு லட்டு வேணுமா…” என்பதை போன்றது. உங்களுக்கு வேணுமா? வேணாமா???

அழகு பராமரிப்பு

பெண்கள் என்றாலே அழகு என்றாலும் கூட, அழகு பராமரிப்பு மீதுள்ள ஈர்ப்பு அவர்களுக்கு குறைவதே இல்லை. அந்த அழகு பராமரிப்பில் கூட இரசாயன பொருட்களைப் பயன்படுத்தாமல், இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தும் குணம் கொண்டவர்கள்.

மசாஜ்

காதலிக்கும் பெண்ணின் விரல் நக நுனி பட்டாலே மசாஜாக உணரும் ஆண்களுக்கு, மசாஜ் செய்துவிடுவதெல்லாம் அசால்ட்டு என சொடுக்கு போடும் பெண் உங்களது காதலியாக இருந்தால், உங்கள் மனம் மட்டுமல்ல, உடலையும் கூட இளகிய நிலையிலேயே பராமரிக்க முடியும்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *