ஒரு ஆச்சரிய தகவல்

மாஸ்டர் என்ற ஒரே படத்தில் ஹீரோயினியாக நடித்து நயன்தாரா வாங்கும் சம்பளத்தை விட அதிக சம்பளம் வாங்கும் நாயகியாக மாளவிகா மோகனன் உயர்ந்துள்ளார்

பாலிவுட் திரைப்படம் ஒன்றில் ஆக்சன் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்திற்காக அவருக்கு ரூபாய் 5 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்பு தொழிலில் இருக்கும் நயன்தாரா கூட இன்னும் ரூ.5 கோடி சம்பளத்தை நெருங்காத நிலையில் மாளவிகா மோகனன், மாஸ்டர் என்ற ஒரே படத்தில் நடித்து சம்பளத்தில் சாதனை செய்துள்ளார்.

ஸ்ரீதேவி நடித்த என்ற ‘மாம்’ படத்தை இயக்கிய ரவி உத்யவார் இயக்கவுள்ள இந்த படத்தில் சித்தாந்த் சதுர்வேதி நாயகனாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply