shadow

ஒரே ஒரு புத்தகத்தால் கோடிஸ்வரி ஆன மலாலா.

i-am-malalaபாகிஸ்தானின் பழமைவாத தீவிரவாதிகள் பெண் குழந்தைகளின் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுமிய துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிர் பிழைத்த அவர் மேல்சிகிச்சைக்காக லண்டன் சென்றார். பின்னர் லண்டனிலேயே தனது படிப்பை தொடரந்த அவர் கடந்த 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றார்.

இந்நிலையில், தனது பள்ளி மற்றும் தாக்குதல் அனுபவங்களை கொண்டு ‘I am Malala’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதினார். இந்த புத்தகத்தை விற்பனை செய்வதற்காகவும், பதிப்புரிமையை பாதுகாப்பதற்காகவும் அவரது குடும்பத்தினர்களை பங்குதாரர்களாக ஆக்கினார்.

இந்த நிறுவனத்தின் மதிப்பு கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சுமார் ரூ.15 கோடியாக இருந்தது. மேலும், அந்த நிறுவனம் ஒரே ஆண்டில் மேலும் ரூ.7.4 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

மேலும், மலாலா புத்தகத்தின் சொற்பொழிவுகளை பயன்படுத்துபவர்கள் இந்த நிறுவனத்துக்கு பதிப்புரிமை தொகை செலுத்தி வருகின்றனர். இதன் மூலமும் மலாலாவின் நிறுவனம் வருவாய் ஈட்டி வருகிறது.

ஒரே ஒரு புத்தகத்தின் விற்பனை மற்றும் பதிப்புரிமையின் மூலம் கிடைத்த தொகையில் தற்போது மலாலா கோடீஸ்வரியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Malala becomes millionaire in only one book

தமிழில் வெளியாகிறது மலாலாவின் சுயசரிதை.

Leave a Reply