ரஜினி-ரஞ்சித் படத்தில் இருந்து பிரகாஷ்ராஜ் அதிரடி நீக்கம்?

prakashrajரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் மெயின் வில்லனாக நடிக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் தற்போதைய தகவலின்படி, பிரகாஷ்ராஜுக்கு பதிலாக இந்த படத்தில் ஜே.டி.சக்கரவர்த்தி வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கமல்ஹாசன் நடிக்கும் தூங்காவனம் படத்தில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ், அந்த படத்திற்காக அதிகளவு கால்ஷீட் தேதிகள் கொடுத்துவிட்டதாகவும், ரஞ்சித் கேட்ட தேதிகள் பிரகாஷ்ராஷிடம் இல்லை என்பதால் பிரகாஷ்ராஜ் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜே.டி.சக்கரவர்த்தி சமீபத்தில் வெளிவந்த அரிமா நம்பி மற்றும் சமர் போன்ற படங்களில் வில்லனாக அபாரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே, மற்றும் அட்டக்கத்தி தினேஷ், கலையரசன், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். மலேசியா, சிங்கப்பூர், ஐதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், ரஜினிகாந்த் இந்த படத்தில் வயதான டான் வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் ரஞ்சித் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *