shadow

விஜய்-அஜீத்துக்கு போட்டியாக மகேஷ்பாபு. ஏ.ஆர்.முருகதாஸ் திட்டம்?

murugadossதமிழில் விஜயகாந்த், அஜீத், விஜய், சூர்யா ஆகியோர்கள் நடிப்பில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்ட பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தின் உருவாகவுள்ள அடுத்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ‘அகிரா’ என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அடுத்து விஜய் அல்லது அஜீத் நடிக்கும் படங்களை இயக்க அவர் விரும்பினார். ஆனால் இருவருமே அடுத்த படங்களை இயக்கும் இயக்குனர்களை கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டதால் ஏமாற்றம் அடைந்த முருகதாஸ், விஜய்-அஜீத்துக்கு இணையாக புகழ் பெற்றிருக்கும் மகேஷ்பாபு இயக்கவுள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகவுள்ளது.

மகேஷ்பாபு நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் ஸ்ரீமந்துடு திரைப்படம் தமிழிலும் ‘செல்வந்தன்’ என்ற பெயரில் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு தமிழ் ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொருத்து முருகதாஸ்-மகேஷ்பாபு கூட்டணி இறுதிசெய்யப்படும் என கூறப்படுகிறது. விஜய் அஜீத்துக்கு போட்டியாக மகேஷ்பாபுவை தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் பிரபலபடுத்துவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply