shadow

மகேஷ்பாபு-முருகதாஸ் படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘மகேஷ்பாபு 23’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் வரும் ஜூன் மாதம் 23ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு ‘சம்பவாமி’ என்ற டைட்டில் வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது

முதன்முறையாக நேரடி தமிழ் படத்தில் நடிக்கும் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ராகுல்ப்ரித்திசிங் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் முதல்முறையாக வில்லனாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையத்துள்ளார் என்பதும் இவர் கம்போஸ் செய்த பாடல்கள் மிக விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *