நடிகை சமந்தாவின் டுவிட்டர் கருத்து காரணமாக தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் படம் ஒன்று சரியாக ஓடவில்லை என்று தெலுங்கு படவுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த பொங்கல் அன்று வெளியான மகேஷ்பாபு நடித்த நேனொக்கடய்னே என்ற திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பெண்கள் கூட்டம் இந்த படத்துக்கு சுத்தமாக வரவில்லை என விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து தகவல் மகேஷ்பாபுவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கு முக்கியகாரணம், இந்த படத்தின் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான போது டுவிட்டரில் கருத்து தெரிவித்த சமந்தா, பெண்களை இந்த போஸ்டர் இழிவுபடுத்துவது போல் உள்ளது என்று கூறி தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

அந்த போஸ்டரில் மகேஷ்பாபு பீச்சில் நடந்து கொண்டிருக்கும்போது, ஹீரோயின் அவரை நாய்போல் மண்டியிட்டு பின் தொடர்ந்து வருவதுபோல் இருக்கும். சமந்தாவின் இந்த கருத்து காரணமாக டுவிட்டரில் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் சமந்தாவை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த சம்பவத்தால் பெண்கள் இப்படத்தை பார்க்க ஆர்வம் காட்டவில்லை என ஆந்திராவில் கூறபடுகிறது. பெண்கள் கூட்டம் இல்லாததால் படத்தின் வசூல் பெருமளவு குறைந்துவிட்டதாக வருத்தமடைந்த மகேஷ்பாபு,  தற்போது சமந்தா மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *