shadow

images

சமுதாயம் முற்றிலும் சீரழிந்து,இனி சீர்திருத்த இயலாது என்கிற சூழலில்,கல்கி அவதாரம் நிகழும்.உலக வெப்பம் படிப்படியாக உயர்ந்து,தாவரங்களைத் தோற்றுவிக்கும் தகுதியை பூமி இழந்துவிடும். உணவின்றி விலங்குகளும் மடிந்துவிடும்.மனிதர்கள் சக மனிதரையே உணவாக்க முயற்சிப்பர்.அப்போது கல்கி அவதாரம் நிகழும்.வேகமாக செயல்படும் வாகனம் குதிரை.தனியொருவராக போர்புரியக் கிளம்பும் கல்கிக்கு அந்தக்குதிரை உதவும்.எல்லாம் அற்றுப்போன அந்த வேளையில்,நமது பண்பாட்டில் ஊறிய ஒரு குடும்பத்தில்(திருநெல்வேலி மாவட்டம் என்று ஒரு கருத்து பேசப்படுகிறது)தோன்றுவார்.அந்தக்குடும்பத்தின் பராமரிப்பில் இருக்கும் குதிரை,அவருக்குவாகனமாக செயல்படும்.வெப்பம் அதிகமாக,அதிகமாக
வாழ்க்கைக்குத் தேவையான நீர்வளம் குறையும். உயிரினங்களில் வாழ்வு ஸ்தம்பிக்கும்.
புதுப்படைப்புக்குத் தோதாக வெப்பத்தில் எல்லாமும் மூழ்கிவிடும்.இதையே பிரளயம் என்கின்றன புராணங்கள்.அதன்பிறகு படைப்பு தொடரும். படைத்தல்,காத்தல்,அழித்தல் ஆகியன பரம்பொருளின் பொறுப்பில் இருப்பதால், படைப்பதற்காக அழிக்க முற்படுகிறார் கல்கி என்பது புராணத்தகவல்.

Leave a Reply