shadow

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி மீது ரூ.53 கோடி மோசடி புகார். அதிர்ச்சி தகவல்
gandhi
இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டு உத்தமர் என்ற பெயரை எடுத்தவர் மகாத்மா காந்தி. ஆனால் அவரது கொள்ளுப்பேத்தி ஒருவர் ரூ.53 கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து வரும் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி ஆஷிஷ் லதா ரம்போகின். 45 வயதான இவர் மீது 8 லட்சத்து 30 ஆயிரம் டாலர்கள், அதாவது இந்திய மதிப்புக்கு சுமார் 53 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக தென்னாப்பிரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரபல செல்வந்தர்களை சந்தித்த ஆஷிஷ் லதா ரம்போகின், தென்னாப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள கட்டில்களுக்கு படுக்கை வசதி செய்வதற்காக இந்தியாவில் இருந்து மூன்று கண்டெய்னர்களில் லினென் துணிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
      
சுங்கவரி செலுத்தி அவற்றை பெற்றுக்கொள்ள பண உதவி செய்யுமாறு செல்வந்தர்களை கேட்டுக்கொண்ட ஆஷிஷ் லதா ரம்போகின், அதற்கான ரசீதுகளையும் காட்டினார். அந்த துணிகளை டெலிவரி எடுக்க 11 மில்லியன் ராண்டுகள் தேவைப்படுவதாக அவர் கூறியதை நம்பி மஹராஜ் என்பவர் 6.2 ராண்டுகளை கொடுத்தார்.

இதேபோல், தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத இன்னொருவரும் 5.2 ராண்டுகளை அளித்தார். ஆனால், நாளடைவில் அப்படி எந்த துணி கண்டெயனரும் டர்பன் துறைமுகத்துக்கு வரவில்லை என்றும் பித்தலாட்டம் செய்து போலி ரசீதுகளை தயாரித்து தொண்டு நிறுவனத்தின் பெயரால் இந்த மோசடியில் ஆஷிஷ் லதா ரம்போகின் ஈடுபட்டுள்ளார் என்பதும் பணத்தை பறிகொடுத்த இருவருக்கும் தெரிய வந்தது.

இதையடுத்து, பொருளாதார குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் தென்னாப்பிரிக்க நாட்டின் சிறப்பு படையான ‘ஹாக்ஸ்’ அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததன் பேரில், ஆஷிஷ் லதா ரம்போகினிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் அவர் செய்த மோசடிகள் அம்பலமானது.

இதையடுத்து,  திருட்டு, பித்தலாட்டம் செய்து போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது உள்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் டர்பன் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஷிஷ் லதா ரம்போகின் மீது போலீசார் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த விசாரணையில் நேற்று அவர் கோர்ட்டுக்கு வந்திருந்தார். மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி மோசடியில் ஈடுபட்டதாக வந்த செய்தி தென்னாப்பிரிக்காவை மட்டுமின்றி இந்தியாவையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Leave a Reply