மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இயற்கைக்கு மிகவும் கேடு விளைவிக்கக் கூடிய பொருள்களுல் முக்கிய பங்கு வகிப்பது பிளாஸ்டிக் பைகள். வளா்ச்சி என்ற பெயரில் நாம் அனைவரும் துணிப்பைகளை பயன்படுத்துவதை தவிா்த்து பிளாஸ்டிக் பைகளை நாடி சென்று கொண்டு இருக்கிறோம். பிளாஸ்டிக் பைகளில் கட்டி கொடுக்கப்படும் சூடான உணவு பொருள்களை உட்கொள்ளும் பொழுது நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதை அறிந்தும் நாம் அதை பயன்படுத்தி வருகிறோம்.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் இன்று (சனிக்கிழமை) முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலதீன் பைகளை பயன்படுத்துவதை தடுக்க அதிகாாிகள் ஏராளமான குழுக்களை அமைத்துள்ளனா். சந்தைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கடைகள், கடற்கரை போன்ற இடங்களை கண்காணிப்பாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள போதிலும், இன்றும், நாளையும் பாலிதீன் பைகளை எடுத்துச் செல்பவா்களுக்கு அறிவுரை வழங்கப்படும். திங்கள் கிழமை முதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல் முறை பிடிபடுபவா்களுக்கு ரூ.5 ஆயிரம் இரண்டாவது முறை பிடிபடுபவா்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை பிடிபட்டால் ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *