shadow

hqdefault

40 லட்சம்பேர் பங்குபெற்ற 18
நாட்கள் நடந்த மிகப்
பிரமாண்டமான மகாபாரதப்
போர் பற்றியும் அதில்
அமைக்கப்பட்ட வியுகங்கள்
பற்றியும் தெரிந்து
கொள்ளுங்கள்….
இதை
பிரமாண்டமான திரைப்படமாக
எடுத்தால் எப்படி இருக்கும்
என்பதை கற்பனை செய்து
பாருங்கள்!
.
1.கிராஞ்ச வியுகம் (heron
formation)
2.மகர வியுகம் (crocodile
formation)
3.கூர்ம வியுகம் (tortoise or
turtle formation)
4.திரிஷுல வியுகம் (trident
formation)
5.சக்ர வியுகம் (wheel or discus
formation)
6.கமலா வியுகம் or பத்மா
வியுகம் (lotus formation)
7.கருட வியுகம் (eagle formation)
8.ஊர்மி வியுகம் (ocean
formation)
9.மண்டல வியுகம் (galaxy
formation)
10.வஜ்ர வியுகம் (diamond or
thunderbolt formation)
11.சகட வியுகம் (box or cart
formation)
12.அசுர வியுகம் (demon
formation)
13.தேவ வியுகம்(divine
formation)
14.சூச்சி வியுகம்(needle
formation)
15.ஸ்ரிங்கடக வியுகம் (horned
formation)
16.சந்திரகல வியுகம் (crescent
or curved blade formation)
17.மலர் வியுகம் (garland
formation)
18.சர்ப வியுகம் (snake
formation)…..
…………………………..மகாபாரதத்தில்,
குருசேத்திரப் போரின் போது
பாண்டவர் தரப்பில் 7
அக்குரோணி படைகளும்,
கௌரவர்கள் தரப்பில் 11
அக்குரோணி படைகளுமாக 18
அக்குரோணி படைகள்
பங்கெடுத்தது. ஒரு
அக்குரோணி என்பது 21870
தேர்களையும், 21870
யானைகளையும், 65610
குதிரைகளையும், 109350 படை
வீரர்களையும் உள்ளடக்கியது
படைப்பிரிவுகளின் கணக்கு
படைப்பிரிவுகள்
பின்வருமாறு
கணக்கிடப்படுகின்றன: ஒரு
தேர், ஒரு யானை, மூன்று
குதிரைகள், ஐந்து
படைவீரர்கள் கொண்ட பிரிவு,
ஒரு பட்டி எனப்படும்.
3 பட்டிகள் கொண்டது 1
சேனாமுகம்
3 சேனாமுகங்கள் கொண்டது 1
குல்மா
3 குல்மாக்கள் 1 கனம்
3 கனங்கள் 1 வாகினி
3 வாகினிகள் 1 பிரிதனா
3 பிரிதனாக்கள் 1 சம்மு
3 சம்முக்கள் 1 அனிகினி
10 அனிகினிக்கள் 1
அக்குரோணி
குருசேத்திரப்போர் படை
விபரங்கள்
குருசேத்திரப் போரில்
கௌரவர்களுக்குச் சார்பாக
அத்தினாபுரத்துப் படைகளும்
அவர்களுக்கு ஆதரவான பிற
படைகளுமாகப் 11
அக்குரோணி படைகள்
ஒருபுறத்திலும், பாஞ்சாலம்,
விராடம், போன்ற பல்வேறு
அரசுகளின் படைகளை
உள்ளடக்கிய
பாண்டவர்களுக்குச் சார்பான 7
அக்குரோணி படைகள்
ஒருபுறத்திலுமாகப்
போரிட்டன.
கௌரவர் தரப்புப் படைகள்
துரியோதனன் தரப்பில்
போரிட்ட படைகள்:
பாகதத்தன் படைகள் – 1
அக்குரோணி
சல்யனின் மதுராப் படைகள் – 2
அக்குரோணிகள்
பூரிசுவரர்கள் – 1
அக்குரோணி
கிருதவர்மன் (கிருட்டிணனின்
நாராயணிப் படைகள்) – 1
அக்குரோணி
சயத்திரதன் படைகள் – 1
அக்குரோணி
காம்போச அரசன்
சுதக்சினனின் படைகள் – 1
அக்குரோணி
விந்தன், அனுவிந்தன்
என்போரின் அவாந்திப்
படைகள் – 1 அக்குரோணி
ஐந்து கேகய சகோதரர்
படைகள் – 1 அக்குரோணி
அத்தினாபுரத்துப் படைகள் – 3
அக்குரோணி
பாண்டவர் தரப்புப் படைகள்
விருஷ்னி வம்சத்துச்
சாத்யகியின் படைகள் – 1
அக்குரோணி
நீலனின் மகிசுமதிப் படைகள் –
1 அக்குரோணி
சேதிசு அரசர்
திருட்டகேதுவின் படைகள் – 1
அக்குரோணி
சராசந்தனின் மகன்
சயத்சேனனின் படைகள் – 1
அக்குரோணி
துருபதனின் படைகள் – 1
அக்குரோணி
மத்சய அரசன் விராடனின்
படைகள் – 1 அக்குரோணி
திராவிட அரசர்களின் படைகள்
(சோழரும் ,பாண்டியரும்) – 1
அக்குரோணி……
………………….தற்போதைய
கணக்குப்படி பாண்டவர்கள்
படையில்7 அக்குரோணி
(15,30,900 படைகளும்)
கௌரவர் படையில்11
அக்குரோணி
(24,05,700 படைகளும்)
இருந்தன.

Leave a Reply