shadow

TNPL கிரிக்கெட்: மதுரை அணிக்கு ஹாட்ரிக் தோல்வி

cricketTNPL கிரிக்கெட் போட்டியின் நேற்றைய போட்டியில் மதுரை அணி கோவை லைகா அணியிடம் தோல்வி அடைந்தது.

டாஸ் வென்ற கோவை லைகா அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். முதலில் களமிறங்கிய இந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மதுரை அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்ததால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 189 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த போட்டிய்யில் கோவை அணியின் தருண் ஸ்ரீனிவாஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஏற்கனவே மதுரை அணி, திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் அணியுடன் மோதி தோல்வி அடைந்துள்ள நிலையில் நேற்றைய போட்டியிலும் தோல்வி அடைந்ததால் அந்த அணிக்கு ஹாட்ரிக் தோல்வி கிடைத்துள்ளது.

Leave a Reply