shadow

madurai student

அமெரிக்காவின் நாசா அமைப்பு வைத்த ஒரு போட்டியில் மதுரை பள்ளி மாணவிகள் மூன்றாவது பரிசை வென்றுள்ளனர்.

அமெரிக்காவின் நாசா நிறுவனம் சுற்றுப்புற சூழல் குறித்து வைத்த போட்டிகளில் உலகம் முழுவதிலும் இருந்து மாணவர்களின் குழுக்கள் பங்கு கொண்டன. இந்த போட்டியில் மதுரை ஸ்ரீசாரதா வித்யாலயம் பெண்கள் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவிகள் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றும் கலந்துகொண்டது. இந்த குழுவில் 11ஆம் வகுப்பு மாணவிகளான விசாகா நந்தினி, செண்பகம், கமலி, திவ்யப்ரியா மற்றும் யோகலட்சுமி ஆகிய ஐந்து பேர் இருந்தனர்.

இவர்கள் தயாரித்து அனுப்பிய கட்டுரை நாசா மூன்றாவது பரிசுக்கு தகுதி பெற்றதாக அறிவித்துள்ளது. இதன் பரிசளிப்பு விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரும் மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து மதுரை மாணவிகளும் நேரில் சென்று பரிசை பெற்றுக்கொள்வார்கள்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *