adinam

மதுரை ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மடம்  ஆகும். இதன் தற்போதைய ஆதினமாக அருணகிரிநாத ஞானசம்பந்தர் அவர்கள் பதவியில் உள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் நித்யானந்தாவை மதுரை ஆதினமாக பதவி நியமனம் செய்து பெரும் சர்ச்சையில் சிக்கி, அதன்பின்னர் அதில் இருந்து விடுபட்டார்.

இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மதுரை ஆதினம் நேரில் சந்தித்து அதிமுகவின் 40 வேட்பாளர்களுக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்ய விரும்புவதாக கூறினார். இதற்கு ஜெயலலிதா அவரிடம் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இந்த தகவலை அதிமுக தலைமைக்கழகம் இன்று சென்னையில் தனது செய்திக்குறிப்பில் கூறியிருக்கின்றது. மதுரை ஆதினம் ஆரம்ப காலகட்டத்தில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *