shadow

sun tvசன் டிவி நெட்வொர்க் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.742 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சமீபத்தில் அமலாக்கப்பிரிவு முடக்கியது. இதற்கு எதிராக சன் டிவி தொடர்ந்த வழக்கில்  சன் டி.வியின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஏற்கனவே சன் டிவி நெட்வொர்க்கின் 33 சேனல்களுக்கான உரிமம் புதுப்பிக்க மத்திய அரசு மறுத்துள்ள நிலையில் சன் டிவிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் தனக்கு இருந்த ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனப் பங்குகளை, மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க கடந்த 2006-ம் ஆண்டு மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக வெளிநாடு வாழ் இந்தியர் சிவசங்கரன் சிபிஐ-யிடம் 2011-ல் புகார் கொடுத்தார். இந்த வழக்கில் சன் டிவி நிறுவனத்தின் ரூ. 742 கோடி சொத்துகளை முடக்கி மத்திய அமலாக்கத் துறை உத்தரவிட்டது.

இந்த முடக்கத்துக்கு எதிராக சன் டி.வி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சன் டி.வின் கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிபதி தெரிவித்தார். சன் டி.வி. வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் சொத்துக்கள் முடக்கத்துக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க இயலாது என நீதிபதி சத்தியநாராயணன் விளக்கமளித்தார்.

Leave a Reply