shadow

marriage ageபெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்தக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அதிரடியாக தள்ளுபடி செய்தது.

பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தக் கோரி வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மேலும், ஆணின் திருமண வயதை 21ல் இருந்து 25 ஆக உயர்த்த வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நேற்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமண வயதை அதிகரிப்பது போன்ற விவகாரம் அரசின் கொள்கை முடிவு என்றும், அதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று கூறிய நீதிபதி, திருமண வயதை உயர்த்தக்கோரிய வழக்கில் எந்த உத்தரவையும் தற்போது பிறப்பிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

Leave a Reply