shadow

pink-eye

சென்னை உள்பட பல நகரங்களில் கோடை காலத்தில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் பரவி வருவது வழக்கம். தற்போது சென்னை உள்பட சில நகரங்களில் மெட்ராஸ் ஐ நோய் பரவியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

மெட்ராஸ் ஐ என்று சொல்லப்படும் கண் நோய் அடினோ என்ற வைரஸ் கிருமி பாதிப்புகளால் ஏற்படுகிறது. இந்த நோய் பாதித்தவர்கள் கண்கள் சிவப்பாகவும் எரிச்சலுடனும் காணப்படும். மருத்துவர்களின் ஆலோசனை பெற்று அதற்குரிய மருந்தை பயன்படுத்தினா. ஒரு வாரத்திற்கு சரியாகிவிடும். தினமும் சென்னை மருத்துவமனைக்கு மெட்ராஸ் ஐ நோய் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது பரவி வருவதாகவும், அதற்குரிய சிகிச்சை முறையை முறையாக எடுக்கும்படியும் சென்னை நகர மக்களை மாநில சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கண் நோய் பாதித்தவர்களை பார்ப்பதால் இந்த நோய் பரவாது என்றும், அவர்கள் கண்களில் இருந்து வரும் கண்ணீர் பட்டாலோ அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருட்களை நாம் பயன்படுத்தும் போதோ கிருமி பரவி கண் நோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Leave a Reply