leenaஜான் ஆபிரஹாம், நர்கிஸ் நடித்த ‘மெட்ராஸ் கபே’ என்ற பாலிவுட் படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்த நடிகை லீனா மரியா பால், நேற்று மோசடி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதால் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லீனா மரியா பால்  தன் நண்பர் சேகர் சந்திரசேகர் என்பவருடன் இணைந்து மும்பையில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மிகக்குறுகிய காலத்தில் முதலீடு செய்த தொகையை விட 10 மடங்கு அதிகமாக திரும்ப‌ வழங்கப்படும் என்று கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக ஏராளமான புகார் வந்தது.

இந்த நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பலர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் அதிரடி நடவடிக்கையாக நடிகை லீனா மற்றும் சேகர் சந்திரசேகர் ஆகிய இருவரையும் மும்பை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *