தீபிகா படுகோனேவின் வரலாற்று படத்தில் மதன்கார்க்கி
deepika
ரன்வீர்சிங், தீபிகா படுகோனே, ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள  ‘Bajirao Mastani’ என்ற வரலாற்று திரைப்படம் வரும் டிசம்பர் 18ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

பாகுபலிக்கு இணையாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படம் அதே தேதியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் வெளியிட ஈராஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே பாகுபலி’ படத்தின் தமிழ் பதிப்பிற்கு வசனம் எழுதிய மதன்கார்க்கி, இந்த படத்திற்கும் வசனம் எழுதுவதோடு பாடல்களையும் எழுத ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மதன்கார்க்கியின் அனல் பறக்கும் வசனங்களுடன் இந்த படம் வரும் 18ஆம் தேதி தமிழகம் முழுவதும் பெரும்பாலா திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *