விஷால்-சுந்தர் சியின் ‘மதகஜ ராஜா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
Vishal, Anjali Hot in Madha Gaja Raja Movie Stills
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மதகஜ ராஜா’ திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய படம். ஆனால் இந்த படத்திற்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சனை காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேம் பெட்டிக்குள் முடங்கியிருந்தது. இந்நிலையில் விஷாலின் தீவிர முயற்சிகள் காரணமாக தற்போது இந்த படத்தின் ஒவ்வொரு பிரச்சனையாக முடிக்கப்பட்டு தற்போது ஒருவழியாக ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதகஜராஜா திரைபப்டம் வரும் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகவும் இந்த முறை கண்டிப்பாக படம் ரிலீஸ் ஆகிவிடும் என்றும் விஷால் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், மனோபாலா, சடகோபன் ரமேஷ், மணிவண்ணன், மொட்டை ராஜேந்திரன், மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். சுந்தர் சி இயக்கிய இந்த படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *