shadow

மாதவன் – விஜய்சேதுபதி இணையும் விக்ரம்-வேதா
madhavan
சமீபத்தில் ‘இறுதிச்சுற்று’ என்ற வெற்றி படத்தில் நடித்த மாதவனும், ‘நானும் ரவுடிதான்’ வெற்றி படத்தில் நடித்த விஜய்சேதுபதியும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர் என்று வந்த செய்தியினை நேற்று பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த டைட்டில் மாதவன் மற்றும் விஜய்சேதுபதியின் பெயர்களாக இருக்கக்கூடும் என தெரிகிறது.

ஓரம்போ, ‘வா குவார்ட்டர் கட்டிங்’ போன்ற படங்களை இயக்கிய புஷ்கர்- காயத்ரி இயக்கவுள்ள இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ்” என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக மாதவனும், கேங்க்ஸ்டராக விஜய்சேதுபதியும் நடிக்கவுள்ளனர்.

Leave a Reply