shadow

maan-karate-movie-working-stills03கடந்த வெள்ளியன்று ரிலீஸான சிவகார்த்திகேயனின் மான் கராத்தே திரைப்படம் மூன்றே நாட்களில் ரூ.12 கோடி வசூல் செய்து சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் சாதனையை முறியடித்துள்ளது.

ரூ.15 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட மான் கராத்தே, ரூ.42 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இவற்றில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும் ரூ.12 கோடியை தமிழகத்தில் இருந்து வசூல் செய்துள்ளது. மேலும் வரும் வெள்ளியன்று விஷாலின் நான் சிகப்பு மனிதன் ரிலீஸ் ஆவதால், அதுவரை அனைத்து தியேட்டர்களிலும் நல்ல வசூலை இந்த படம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் மூன்று நாட்களில் ரூ.7.5 கோடிதான் வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது. மான் கராத்தே வெற்றியால் சிவகார்த்திகேயன் கோலிவுட் மார்க்கெட் வெகுவாக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் கேட்கிறார் என்று கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் திடீர் வளர்ச்சியை பார்த்து இளம் கதாநாயகர்கள் வயிற்றெரிச்சலில் இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Leave a Reply