shadow

சிவ கார்த்திகேயன், ஹன்சிகா இணைந்து நடிக்கும் படம் “மான் கராத்தே” இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. ஹன்சிகா இதில் விளையாட்டு வீராங்கனையாக நடிக்கிறார்.

படத்தின் முக்கியமான பாடல் காட்சியொன்று புதுச்சே‌ரியில் படமாக்கப்பட்டது அதில் சிவ கார்த்திகேயன், ஹன்சிகா ஆடினர். பிருந்தா மாஸ்டர் இந்த நடனத்தை வடிவமைத்தார்.

எதிர்நீச்சல் படத்தில் வரும் பூமி என்னை சுத்துதே… பாடல் எடுக்கப்பட்ட அதே லொகேஷனில் இந்தப் பாடல் காட்சி எடுக்கப்பட்டதாக தனது ட்விட்டர் செய்தியில் சிவ கார்த்திகேயன் தெ‌ரிவித்துள்ளார்.

டிசம்ப‌ரில் படப்பிடிப்பை முடித்து 2014 தொடக்கத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply