கேப்டன் தோனி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு
sushanth__0_0_0_0_0_0
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை மற்றும் 20 ஓவர்கள் உலகக்கோப்பை ஆகிய இரண்டையும் பெற்றுத்தந்த ஒரே கேப்டன் எம்.எஸ்.தோனி என்பது குறிப்பிடத்தக்கது. தோனி கேப்டனாக இருந்த காலம்தான் இந்திய கிரிக்கெட் அணியின் பொற்காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எம்.எஸ்.தோனி கிரிக்கெட் மற்றும் பர்சனல் வாழ்க்கை குறித்த திரைப்படம் ஒன்று தற்போது பாலிவுட்டில் தயாராகி வருகிறது. பிரபல பாலிவுட் இயக்குனர் நீரஜ் பாண்டே இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் தோனி கேரக்டரில் சுஷாந்த் சிங் என்ற நடிகரும், தோனியின் மனைவி சாக்ஷி கேரக்டரில் கைரா அத்வானி என்ற நடிகையும், தோனியின் தந்தையாக அனுபம்கெர் என்ற நடிகரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த திரைப்படம் வரும் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக இயக்குனர் நீரஜ் பாண்டே தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

 இந்த படத்திற்கு “M.S. Dhoni:The Untold Story” என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த திரைப்படம் கிரிக்கெட் ரசிகர்களை பெருமளவு கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *