shadow

டெல்லி கிளம்பினார் ஸ்டாலின். சட்டப்பேரவை நிகழ்வு குறித்து ஜனாதிபதியிடம் முறையீடு

கடந்த சனிக்கிழமை நடந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நிகழ்ந்த ஜனநாயக படுகொலை குறித்து இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் முறையிட தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சற்று முன்னர் டெல்லி கிளம்பினார்

இன்று ஜனாதிபதியை நேரில் சந்திக்கும் ஸ்டாலின், தகுந்த ஆதாரங்களுடன் சட்டப்பேரவையில் நிகழ்ந்தவைகளி முறையிட உள்ளாராம். ஏற்கனவே ஆளூனர் இதுகுறித்து அறிக்கை அனுப்பியுள்ள நிலையில், ஸ்டாலின் சந்திப்புக்கு பின்னர் ஜனாதிபதியின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை அனைத்து தமிழர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் சென்னை ஐகோர்ட்டில் இதுகுறித்த வழக்கு ஒன்று வரும் 27ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. மேலும் அதிமுக பொதுச்செயலாளர் நியமனம் விஷயமாக தேர்தல் கமிஷனும் விளக்கம் கேட்டுள்ளதால் சசிகலா அணிக்கு நாலாபக்கத்தில் இருந்தும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.

Leave a Reply