புதுவை முதல்வர் போட்டியிடும் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

1தமிழகத்தில் உள்ள தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ள நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போட்டியிடும் நெல்லிக்குப்பம் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்வார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

இதுகுறித்து புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியபோது, “காங்கிரஸ் கட்சித் தலைமை என்னை நெல்லித்தோப்பு தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது. எங்கள் ஆட்சியின் 3 மாதகால சாதனைகள், செயல்பாடுகள், புதுவை மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு, அமைதி, தொழில்கொள்கை, சுற்றுலா வளர்ச்சி போன்றவை குறித்து பிரசாரம் செய்வோம்.

தேர்தல் பிரசாரத்துக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் குலாம்நபி ஆசாத், முகுல்வாஸ்னிக், சின்னாரெட்டி ஆகியோர் வருவதாக தெரிவித்துள்ளனர் என்றார் நாராயணசாமி.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *