திமுக தலைவர் கருணாநிதியின் மகனான மு.க.முத்து உடல் நலக்குறைவு காரணமாக புதுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் திருவாரூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மு.க.முத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க காரில் அழைத்து வந்தனர். கார் புதுவைக்கு அருகில் வந்தபோது மு.க.முத்துவின் உடல்நிலை மேலும் மோசமானது. இதனால் புதுவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த தமிழக முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எம். ஆர். கே. பன்னீர்செல்வம், புதுவை மாநில திமுக அமைப்பாளர் எம். ஏ. எஸ். சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் எஸ். பி. சிவக்குமார் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவா, கென்னடி, சோமசுந்தரம் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சென்று அவரை பார்த்தனர்.

Leave a Reply