shadow

கருணாநிதியை மீண்டும் சந்தித்து நலம் விசாரித்த மு.க.அழகிரி

karunanidhi-azhagiriதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருப்பதால் தற்போது அவர் முழு ஓய்வில் உள்ளார். அவருடைய உடல்நலம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேரில் விசாரித்த அவருடைய மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி இன்று மீண்டும் தனது தந்தையை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்த சந்திப்பில் அரசியல் குறித்து ஏதும் பேசப்பட்டதா? என்பது தெரியவில்லை. இருப்பினும் அழகிரி மீது கருணாநிதிக்கு ஒரு சாப்ட்கார்னர் ஏற்பட்டுள்ளதாகவும் மீண்டும் அவரை கட்சியில் சேர்க்க வாய்ப்பு இருப்பதாகவும் திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மு.க.அழகிரி மீண்டும் திமுகவில் இணைந்தால் தென்மாவட்டங்களில் திமுக வலிமை பெறும் என்பதே பெரும்பாலான திமுக தொண்டர்களின் கருத்தாக உள்ளது.

Leave a Reply