shadow

நாளை ரஜினி பிறந்த நாளில் ‘எந்திரன் 2’ படபூஜை. அதிகாரபூர்வ அறிவிப்பு
enhiran 2
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ‘எந்திரன் 2’ படத்தின் பூஜை நாளை சென்னையில் எளிமையாக நடத்த லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள அந்நிறுவனம் சென்னை வெள்ள பாதிப்பு காரணமாக இந்த படத்தின் பூஜை எளிமையாக நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

நாளை சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ரஜினியின் பிறந்த நாளில் அவர் நடித்த ‘லிங்கா’ திரைப்படம் வெளியான நிலையில், இந்த ஆண்டு அவர் நடிக்கவுள்ள ‘எந்திரன் 2’ படபூஜை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்ற ‘பாகுபலி’ படத்தின் சாதனையை இந்த படத்தின் பட்ஜெட் உடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி, அர்னால்ட், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பல விஐபிகளின் சம்பளமே ரூ.200 கோடியை நெருங்கும் என்றும் மேலும் பலகோடி செலவில் கிராபிக்ஸ் காட்சிகள் அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ரஜினி தற்போது ‘கபாலி’ படப்பிடிப்பில் இருப்பதால் அவர் பூஜையில் கலந்து கொள்ள மாட்டார் என கூறப்படுகிறது.

Leave a Reply