மணிரத்னம் படத்தையும் தயாரிக்கின்றது லைகா நிறுவனம்

கோலிவுட் திரையுலகில் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்த லைகா நிறுவனம் அதன் பின்னர் பல படங்களை தயாரித்தும், விநியோகம் செய்தும் வருகிறது.

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ மற்றும் கமல் நடிக்கவுள்ள ‘இந்தியன் 2’ ஆகிய இரண்டு படங்களையும் பலகோடி பட்ஜெட்டில் இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.  இந்த நிலையில் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படமான மல்டிஸ்டார் படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது.

இந்த நிலையில் ரஜினி, கமலை அடுத்து மணிரத்னம் அவர்களுடன் கைகோர்க்க லைகா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சிம்பு, விஜய்சேதுபதி, ஜோதிகா, பகத்பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், அரவிந்தசாமி ஆகியோர் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படம் உருவாகவுள்ளதால் அதிக பட்ஜெட் காரணமாக லைகா நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை மணிரத்னம் தயாரிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *