shadow

சொத்துக்கள் மீதான தடை தொடரும்: ஐரோபிய யூனியன் அறிவிப்பால் விடுதலைகள் அதிருப்தி/

சமீபத்தில் 28 நாடுகளை கொண்ட ஐரோப்பிய யூனியன் விடுதலைப்புலிகள் மீதான தடைய நீக்கியது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்வேறு வங்கிகள் புலிகளின் பெயரால் உள்ள கணக்குகளில் உள்ள பணத்தை வெளியே எடுக்கலாம் என்று ஆர்வத்துடன் இருந்தனர்.

ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கினாலும், அந்த இயக்கத்தின் சொத்துகள் மீதான தடை தொடரும் என ஐரோப்பிய யூனியன் அறிவித்து உள்ளதால் புலிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து ஐரோப்பிய யூனியன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஐரோப்பிய கோர்ட்டு கடந்த 26-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், 2009-ம் ஆண்டு நடந்த இலங்கை இறுதிகட்ட போரில் விடுதலைப்புலிகள் தோல்வியடைந்த பின்னரும், இலங்கையில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடுவதற்கான நோக்கம் அந்த அமைப்புக்கு இருப்பதாக நம்புவதை ஐரோப்பிய யூனியன் விளக்க தவறிவிட்டதாக கூறியுள்ளது.

எனவே 2011 முதல் 2015 வரையிலான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சொத்துகளை முடக்குவதை ரத்து செய்வதை உறுதிப்படுத்துவதாக கோர்ட்டு கூறியுள்ளது. இதனால் அந்த உத்தரவு அந்த குறிப்பிட்ட காலத்துக்கு (2011-2015) மட்டுமே பொருந்தும்.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி வரும் காலங்களில் வழக்கு தொடரப்பட்டால் அது கருத்தில் கொள்ளப்படும். தற்போதைய நிலையில், விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு என ஐரோப்பிய யூனியனால் வகைப்படுத்தப்பட்டு இருக்கும் நடவடிக்கை தொடர்வதுடன், அந்த இயக்கத்தின் சொத்துகள் முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடரும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

 

Leave a Reply