வங்கக்கடலில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது. இது கடந்த 2 நாட்களுக்கு முன்பே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது மண்டலமாக மாறவில்லை. ஆனால் இன்று மாற உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மண்டல ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-

தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று வருகிறது. அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது. அது எந்த திசையில் செல்ல உள்ளது என்பதை கவனித்து வருகிறோம்.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும்.

Leave a Reply