shadow

500 வருடத்திற்கு பின் வரலாறு காணாத மழை. அமெரிக்காவின் லூசியானா மாகாணம் மூழ்கியது

shadow

அமெரிக்காவில் உள்ள லூசியானா மாகாணத்தில் மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாள் இரவில் பெய்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அந்நகரமே தீவுபோல காட்சியளிக்கின்றது. இதுவரை இந்த வெள்ளத்திற்கு 3 பேர் பலியாகி இருப்பதாகவும் சுமார் 1000 குடும்பங்கள் தங்கள் வீட்டை விட்டுவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பகுதியில் 500 வருடங்களுக்கு பின் இவ்வளவு பெரிய மழை தற்போதுதான் பெய்துள்ளதாகவும், கடந்த வெள்ளியன்று இரவு ஆரம்பித்த கனமழை இரவு முழுவதும் பெய்ததோடு மறுநாளும் தொடர்ச்சியாக பெய்து கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

நூற்றுக்கணக்கான வீடுகள் மூழ்கியுள்ள நிலையில் மீட்புப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும் வெள்ளம் வடிந்தபின்னர்தான் பலி எண்ணிக்கை குறித்த முழுவிபரங்கள் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply