shadow

8j

லண்டன் நகருக்கு சுற்றுலா செல்பவர்கள் லண்டன் நகரின் அழகை தரைவழியே மட்டும் கண்டு ரசிப்பார்கள். ஆனால் விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் நகரம் எப்படி இருக்கும் என்பது பலருக்கு தெரியாது. இந்த குறையை போக்குவதற்காக பிரிட்டன் நாட்டின் தொழில்முறை புகைப்படக் கலைஞர் ஒருவர் ஹெலிகாப்டரில் இருந்தபடியே லண்டன் நகரை வித்தியாசமான கோணங்களில் புகைப்படம் எடுத்து அந்த புகைப்படங்களை வரிசைப்படுத்தி கண்காட்சி வைத்துள்ளார்.

 46 வயதான ஜேசன் ஹாக்ஸ் என்ற இந்த புகைப்பட கலைஞர் எடுத்த புகைப்படங்களை பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

 இந்த புகைப்படங்கள் குறித்து ஜேசன் ஹாக்ஸ் கூறும்போது, “நான் உலகின் பல நாடுகளுக்கு சென்றுள்ளேன். ஆனால் லண்டன் நகரை போன்ற ஒரு கச்சிதமான அழகான நகரை நான் கண்டதில்லை. எனவே லண்டன் நகரை வித்தியாசமாக படமெடுக்க எண்ணியபோதுதான் எனக்கு இந்த ஐடியா வந்தது” என்று கூறியுள்ளார்.

 நமது சென்னை டுடே நியூஸ் வாசகர்களுக்காக இதோ அந்த புகைப்படங்கள்

shadow

Leave a Reply